உன்னாவ் பெண்ணின் விபத்து வழக்கை 7 நாளில் முடிக்க வேண்டும்

உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதையடுத்து,இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று பகல் 12 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

 

இதனையடுத்து சி.பி.ஐ. இணை இயக்குனர் சம்பத் மீனா உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த விசாரணையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றுகிறோம்.

மேலும் இந்த பெண் குடும்பம் மீதான விபத்து வழக்கை 7 நாளில் விசாரித்து முடிக்கவேண்டும். அத்துடன் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றமுடியுமா?என்பது குறித்து அறிந்த பின்னர் மதியம் 2 மணிக்கு இது தொடர்பான இறுதி ஆணையை பிறப்பிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply