முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்: விஜய்யிடம் சி.பி.எம் எம்.எல்.ஏ செல்லசாமி கோரிக்கை
முதலமைச்சர் விஜய் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ செல்லசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் வசூலிக்கப்படும் செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும், முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
மேலும், தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்துள்ளதாகவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாகவும் கூறிய அவர், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஒருசில மாதங்களில் சரிசெய்யப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




