--- --:--:-- --

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

5

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலிலிருந்து மத்தியமேற்கு வங்கக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும், வடக்கு கேரளாவிலிலிருந்து கர்நாடகா வரை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

 

இதன் காரணமாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

 

இதேபோன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon