மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.62 குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் ரூ.652.50 விற்கப்பட்ட சிலிண்டர், இந்த மாதம் ரூ.590.50 விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில், 14.2 கிலோ எடைகொண்ட மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு, 590 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

மானியமில்லா சிலிண்டரின் விலை கடந்த மாதம் 100 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  மொத்தமாக கடந்த இரண்டு மாதத்தில் 163 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் மானியமில்ல சிலிண்டர் விலை 652 ரூபாய் 50 காசுகளாகவும், தற்போது 590 ரூபாய் 50 காசுகளாகவும் உள்ளது.

 

இதே மானியமில்லா சிலிண்டர் விலை டெல்லியில், 574 ரூபாய் 50 காசுகளாகவும், மும்பையில் 546 ரூபாய் 50 காசுகளாகவும் உள்ளது.

 

அதேநேரத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில், மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை குறிப்பிடப்படாததால், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் தொடர்ந்து கிடைக்குமா என்ற அச்சமும் நுகர்வோரிடம் எழுந்துள்ளது. கடந்த மாதம், வணிக ரீதியான 19 கிலோ சிலிண்டர் விலை 178 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 249க்கு விற்பனையானது.


Leave a Reply