--- --:--:-- --

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் புகார் அளித்தார்.. சட்ட நடவடிக்கை எடுங்க – மாணிக்கம் தாகூர்

6

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித் தாள்கள், செய்தித் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

 

 

இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திருசுலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடந்ததாக தான் கூறவில்லை என்றும் எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தான் கோருவதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தில் எந்தவித வெளிப்புற அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் மனுவில் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பெண் மாவட்ட ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருவதாகவும் இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்ததுடன் மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமெனக் காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறப்பட்டது.

 

 

இந்த மனு நேற்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியருக்கே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிர்ஷ்டவசமானது. ஒரு எம்எல்ஏவின் மாண்பை குலைத்துவிடும். இந்தப் பிரச்னையில், ஆட்சியர் புகார் கொடுத்தாரா என்பது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் விசாரித்து தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்குத் தள்ளி வைத்தார்.

 

 

இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் மாவட்ட காவல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை மேற்கோள்காட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் புகார் அளித்திருக்கிறார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.

 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon