புதையலுக்கு ஆசைப்பட்டு நரபலியா?

ஆந்திராவில் 3 பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதையலுக்காக ஆசைப்பட்டு அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அனந்தபுரத்தை அடுத்த கொத்திகோட்டா கிராமத்தில் மிகவும் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதனருகே வசித்து வந்த சிவராம் மற்றும் அவரின் சகோதரி கமலம்மா, கோயிலுக்கு பூஜை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவரும் அவர்களுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் மூவரும் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், கோயிலுக்கு அருகே பூஜை நடத்தப்பட்டிருப்பதையும்,சிவலிங்கத்தின் மீது ரத்தக் கறை இருந்ததையும்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.   கோயில் வளாகத்திலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

 

பூஜை நடத்தப்பட்டிருப்பது தெரியவந்ததால், புதையல் இருப்பதாகக் கருதி யாரேனும் அவர்களை நரபலி கொடுத்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Leave a Reply