மீண்டும் தன்னுடைய பழைய கதாநாயகி உடன் இணைகிறார் சிவா

8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிவா பிரபல நடிகையோடு இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.சிவா – பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் வணக்கம் சென்னை. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்களின் கூட்டணி ஒரு புதிய படத்தில் உருவாகியுள்ளது. ‘பிப்ரவரி 14’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி.ஹொசிமன் இயக்கத்தில் உருவாகி வரும் சுமோ படத்தில் இருவரும் நடித்து வருகின்றனர்.

விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.மேலும் இதில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் வேலையும் சிவா தன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply