பெண்ணே உன்னை பார்த்த போதும்.. வேற யாரும் வேணாமே… லாஸ்லியாவுக்கு போஸ்டர்

Publish by: --- Photo :


பிக் பாஸ் சீசன் 3 யில் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த போட்டியாளர் என்றால் அது லாஸ்லியா மட்டும் தான்.இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா தன்னுடைய அழகான இலங்கை தமிழை பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன பக்கம் ஈர்த்துள்ளார்.

 

பிக் பாஸ் சீசன் 3 ல் பல்வேறு போட்டியாளர்கள் சண்டை போட்டுக்கொள்வதும், மற்றவர் பின்னாடி அவர்களை பற்றி பேசுவதும் என்ற செயல்களை செய்து வரும் நிலையில், லாஸ்லியாமட்டும் யாருடைய வம்புக்கு செல்லாமல், மனதில் தோன்றுவதை தைரியமாக பேசி தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

இந்நிலையில் திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் பற்றி போஸ்டர் ஒன்று அடிக்கப்பட்டுள்ளது.அந்த போஸ்டரில் ஆனி தேரோட்ட திருவிழா என்பது சிறியதாக தெரியும் வகையிலும், பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் புகைப்படமானது பெரிதாக தெரியும் வகையிலும் உள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் “பெண்ணே உன்னை பார்த்தா போதும்… வேறு யாரும் வேணாமே… இப்படிக்கு லாஸ்லியா ஆர்மி என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்ட்டரை ஊர் முழுக்க லாஸ்லியாவின் ரசிகர்கள் அடித்து அலப்பறை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply