சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மின் மாற்றி வெடித்து விபத்துக்கு உள்ளானது. மெட்ரோ ரயில் நிர்வாகமானது கடந்த 2 தினங்களுக்கு முன்னதாகவே இருந்து சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டையில் இருக்க கூடிய மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய உயர் மின் அழுத்தம் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகமானது தொடர்ந்து இந்த மாதிரி பிரச்சனைகளை அடுத்து, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையயத்தில் உயர் மின் அழுத்த கோளாறு காரணமாக அங்கு வைக்கபட்ட மின் தகடுகள் பெயர்த்து எடுக்கப்பட்டும், அங்கிருந்த பலகைகள் அனைத்தும் சிதறிய காட்சிகள் சிசிடிவியில் பதிவு ஆகியுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெறும் போது, ரயில் அங்கு இயங்காத காரணத்தால் , பயணிகள் எவரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதே போல் தாம்பரத்தில் ஏற்பட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஏற்பட்ட மின் பாதிப்பின் காரணமாக பயணச்சீட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது, மற்றும் ரயிலை இயக்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகமானது , இது போன்ற மின் கோளாறு காரணமாக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையான பராமரிப்பை ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை அதற்கான நடவடிக்கை குறித்தும், எவ்விதமான பிரச்சனையை கையாளுகிறார்கள் என்பதும் குறித்தும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையான ஒரு அதிகாரியை நியமித்து இதற்கான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்துள்ளனர். ரயில் பயணிகள் இருந்து இருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்க கூடும்.