10 மாத குழந்தையை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது

கலிபோர்னியாவில் தனது இச்சைக்கு இயங்காத பெண்னின் பத்து மாத குழந்தையை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரேஷ்னோ நகரில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் 18 வயதான டெசிரி என்ற பெண் தனது 10 மாத பெண் குழந்தையுடன் கலந்து கொண்டுள்ளார். அங்கு மார்கஷ் ஆண்டனியா என்ற நபர் டெசிரியிடம் வரம்பு மீறி நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து டெசிரி தனது குழந்தையை தூக்கி கொண்டு தனது நண்பருடன் அங்கிருந்து காரில் சிறிது தூரம் சென்று காரை நிறுத்திவிட்டு மார்க்கஸ் அங்கிருந்து செல்வதற்காக காத்து இருந்துள்ளனர்.

 

அப்போது அங்கு வந்த மார்க்கஸ் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் காரை நோக்கி பல முறை சுட்டதில் குண்டு டெசிரியின் கையில் இருந்த குழந்தையின் தலையில் பாய்ந்து உள்ளது. குழந்தையை எடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அறுவை சிகிக்சை மூலம் குழந்தையின் தலையில் இருந்த குண்டை மருத்துவர்கள் நீக்கி விட்டனர். இருப்பினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மார்க்கசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply