சென்னை புறநகரில் போலீசார் சிறப்பு சோதனை: 70 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் உள்ள 30 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், கஞ்சா விற்பனை தொடர்பாகப் பதியப்பட்ட 18 வழக்குகளில் 27 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 70.39 கிலோ கஞ்சா மற்றும் 260 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், குட்கா விற்பனை தொடர்பாகப் பதியப்பட்ட 25 வழக்குகளில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத்தனமாக மதுபானம் விற்ற வழக்குகளில் மதுவிலக்கு போலீசாரால் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 22.32 லிட்டர் மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன
📱 Share on WhatsApp 𝕏 Share on X




