ஒரே நாடு ஒரே தேர்தல் -ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது ஏன்?

கட்சியின் தலைமைக்கு பதில் நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதால் பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஒரு தேசம்,ஒரே தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. தேர்தல் செலவினங்களை குறைக்கும் வகையில் மக்களவைக்கும், மாநில சட்ட பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

இது குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பதற்கான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் மோடி தலைமையில் நடைபெற்றுள்ள கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் , ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றார். எனினும் கட்சி தலைமைக்கு பதில் நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. ஒரு நாடு,ஒரே தேர்தல் என்பது நாட்டின் பன்முகத் தன்மையை பாதிக்கும் எனக் கூறி மற்ற கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.


Leave a Reply