வயது வந்த மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்க தடை : கோவில் வளாகத்தில் அரசுப்பள்ளி செயல்படும் அலவம்

Publish by: --- Photo :


ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அரசு கட்டிடம் பழுதடைந்ததால், அருகே உள்ள கோவிலில் தற்காலிகமாக வகுப்பு நடந்து வருகிறது. வயதிற்கு வந்த மாணவிகளை கோவிலுக்கு வெளியே தனியாக அமரவைக்கும் கொடுமை நிகழ்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் கட்டிடம் மிக மோசமாக உள்ளதால் அந்த பகுதியில் மைய பகுதியில் உள்ள கோவில் வலகத்திற்கு பள்ளி தற்காலிகமாக மாற்றப்பட்டது. கோவிலின் சமையல் அறை,சாப்பாடு பரிமாறும் அறை மற்றும் மரத்தடி நிழல் உள்ளிட்ட பகுதிகளில் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது.

 

கோவில் வளாகத்தில் வகுப்புகள் செயல்படுவதால் வயது வந்த மாணவிகளை கோவில் வளாகத்திற்குள் வர தடை விதித்து வெளியில் உள்ள மரத்தடியில் அமரவைக்கும் கொடுமையும் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால், வகுப்புகள் செயல்பட கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுள்ளது. பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விரைந்து கட்டி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.