ராகுல் காந்திக்கு, பிரதமர் மோடி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Publish by: --- Photo :


பிறந்த நாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு நரேந்தர மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடையே 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிற நரேந்தர மோடி, ராகுல் காந்தி நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என கூறியிருக்கிறார். தனக்கு வாழ்த்து கூறியதற்காக காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி நன்றியை தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் பதிவிட்டிருக்கிற மு.க. ஸ்டாலின் பொது வாழ்வில் மேலும் பல ஆண்டுகள் சிறந்து விளங்க தன்னுடைய சிறந்த நண்பரான ராகுல் காந்தியை வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனான பழைய புகைப்படம் ஒன்றையும் திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.