தங்கும் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள்,பணம் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே விடுதிக்குள் புகுந்து 4 செல் போன்கள், மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த அப்துல் என்பவர் சிலருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் புழுக்கம் காரணமாக இவரது அறை கதவு தாழ் இடாமல் இருந்து உள்ளது.

 

இதனை பயன்படுத்திக்கொண்டு அறைக்குள் புகுந்த இளைஞர்கள் அப்துலின் செல்போன் மற்றும் 87,000 ரூபாய் ரொக்கத்தை எடுத்து சென்றுள்ளனர். அறையில் தங்கியிருந்த மற்ற மூவரின் செல்போன்களும் திருடப்பட்டுள்ளது. இளைஞர்கள் படிக்கெட்டு வழியாக வந்து செல்லும் சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

அங்கிருந்து செல்லும் பொது காலனி ஒன்றையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரில் திருப்போரூர் போலீசார் தேடாமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Leave a Reply