திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் எரிந்து நாசமாகின. மன்னார்குடி அருகே வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகம் ஆகிய காரணங்களால் கொழுந்துவிட்டு எறிந்த தீ மளமளவென அடுத்தடுத்து வீடுகள் மற்றும் கடைகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிய மூதாட்டி ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தீ அதிகமாக எரிய தொடங்கிய நிலையில் கோட்டூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.இதையடுத்து பலமணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.