பலத்த காற்றின் காரணமாக பேருந்தின் மேற்கூரை பெயர்ந்தது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பலத்த காற்றின் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்குபாளையத்திலிருந்து பொள்ளாசிக்கு சென்று கொண்டிருந்த நகரப்பேருந்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

 

பலத்த காற்று காரணமாக பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. பயணிகள் அலறி கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் மேற்கூரையை சரிசெய்வதற்காக பேருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.


Leave a Reply