திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்

Publish by: --- Photo :


விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. ராதாமணியின் உயிர் பிரிந்தது.67 வயதாகிற திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்.

 

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக அவர் வயிற்று புற்றால் பாதிக்கப்பட்டு அது தொடர்பான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறையாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

 

சட்ட மன்ற கூட்டத் தொடரில் அவர் ஒரு சில நாட்கள் மட்டுமே பங்கேற்க கூடிய சூழலே கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்தது. இப்போது திமுக வின் சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக இருந்த நிலையில் ராதாமணி இறப்பு காரணமாக 100 ஆக குறைந்து இருக்கிறது.
.


Leave a Reply