நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

Publish by: --- Photo :


நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சென்னையில் முதல்வர் இல்லத்தில் தான் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய நாங்குனேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர் முன்னிலையிலே அதிமுகவில் இணையக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய புறநகர் மாவட்டத்தின் செயலாளராக இருக்ககூடிய பிரபாகர்,அவர் எம்.பி. ஆக இருக்க கூடியவர். அவருடைய தலைமையில் தான் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் , அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்க கூடியவர் மற்றும் கிளை கழக செயலாளர்கள், மாணவர் அணியை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் முதலமைச்சர் இல்லத்தில் அவரின்முன்னிலையிலே இணைகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கு பிறகு அமமுகவின் தோல்விக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிமுகவில் சேர்கின்றனர்.


Leave a Reply