பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரிட் கட்டடத்தில் விபத்து ஏற்பட்டால் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து செய்து காண்பிக்கபட்டது. புதிய கட்டிடத்தில் தீ ஏற்பட்டால் தீயணைப்பு பந்து மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் வீட்டில் எரிவாயு சிலிண்டரில் வாயு கசிந்து தீ ஏற்பட்டால் அதனை தடுக்கும் முறை மற்றும் அடுப்பில் உள்ள எண்ணை சட்டி தீ பற்றினாள் அதனை சணல் பையினால் அமைக்கும் முறை பற்றியும் செய்து காண்பித்தனர்.

இயற்கை பேரிடரின் போது கட்டடத்தில் சிக்கி தவிர்ப்பவர்களை மீட்பது குறித்தும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் புனித பௌல் மெட்ரிக் பள்ளியில் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். இதே போல் கரூரில் உள்ள சேரன் மெட்ரிக் பள்ளியிலும் நடந்த தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பின் போது எந்த விதமான உடை அணிந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


Leave a Reply