கன்னியாகுமாரி திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

Publish by: --- Photo :


கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

ஆகவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியின் நான்கு பகுதிகளில் நீர்வரத்து அதிகமுள்ள இரண்டு பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.எஞ்சியுள்ள இரண்டு பகுதிகளில் ஒரு பகுதியில் ஆண்களும் மற்றொரு பகுதியில் பெண்களும் காவல் துறையினரின் பாதுகாப்போடு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.


Leave a Reply