காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் கண்டுபிடிப்பு!

கடந்த 3 ஆம் தேதி காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு என தகவல் கிடைத்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி 13 வீரர்களுடன் காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் நிலைமை பற்றி தெரியவில்லை. ஆனால் அந்த விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply