மக்களவை தேர்தலில் அமோக வெற்றிக்கு பின்னர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக 30 ஆம் தேதிபதவி வகிக்கிறார்.குடியரசு தலைவர்மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் கோலாகல விழாவில் அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானமும் ரகசிய காப்புபிரமானமும் செய்துவைக்கிறார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள்.
மோடி பதவிஏற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், குடியரசு முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதமர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு உள்ளது.இது தவிர மாநில கட்சிகளின் தலைவர்கள்,தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், திரைப்பட நட்சதிரங்கள் என சமூகத்தின் 54 பிரிவுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பிவைக்கபட்டு உள்ளது.
பதவிஏற்பு விழாவில் பிம்ஸ்டெக் என்று சுருக்கமாக அழைக்கபடும், வங்காளவிரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகூட்டமைப்பில் உள்ள வங்காள தேசம் ,மியான்மார்,இலங்கை,தாய்லாந்து,நேபாளம்,பூட்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இருக்கும் கிர்கிஸ்தான்,மொரிஷியஸ்,கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர் உள்ளிட்ட 14 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பட்டுள்ளது.இதில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த்குமர்,மியான்மார் அதிபர் யுவின் மையிண்ட்,கிர்கிஸ்தான் அதிபர் ஜின்பிகோவ்,பூட்டான் பிரதமர் லோட்டே ஷ்ரிங் ,வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது,இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி,தாய்லாந்து சிறப்பு தூதர் கிரிசாடா பூன்ராச் ஆகியோர் பங்கேற்பது உறுதி செய்யபட்டுள்ளது.
வழக்கமாக பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்தில் நடைபெறுவது வழக்கம். அந்தஅரங்கத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும் என்பதால் மாளிகையின் முன்புறத்தில் உள்ள மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
வெளிநாடு தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் அந்த மைதானத்தில் இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டில்
சந்திரசேகரும்,1998 -ம் ஆண்டு வாஜ்பாயும், 2014-ம் ஆண்டில் மோடியும் பிரதமராக பதவி ஏற்றனர்.கடந்த முறை மோடி பதவி ஏற்ற விழா மாலை 4 மணிக்கு நடைபெற்றது .அதில் நான்காயிரம் பேர் பங்கேற்றனர்.கடும் கோடை காலம் என்பதால் அப்போது வெயில் அதிகம் இருந்தது.விருந்தினர்கள் தவித்து போகும் நிலை ஏற்பட்டது.
இதனை தவிர்க்கவே இப்போது விழா இரவு 7 மணிக்கு நடைபெறஉள்ளது.இந்த முறை ஆறாயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. விருந்தினர்களுக்கு வருகையின் போது டீ, சாமோசா மற்றும் ரசகுல்லா ,பாலில் செய்த இனிப்புகள் வழங்கபட உள்ளன.விழா முடிந்த பின்னர் சைவம் மற்றும் அசைவ விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.வெளிநாட்டு தலைவர்களுக்கும் அவர்களுடன் வருபவர்களுக்கும் அந்தந்த நாட்டின் உணவுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.