இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து,பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரசகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.அவரை தொடா்ந்து அமைச்சராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாபாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி, ஹர்ஷவர்தன் உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ரமேஷ் போக்ரியால் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கௌர் ஆகியோர் அமைச்சர்களாக பதவிஏற்றுக்கொண்டனர்.
பாஜகவைச் சேர்ந்த தாவர் சந்த் கெலோத்தும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா ஆகியோா் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
ரவி சங்கர் பிரசாத், நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு மத்திய அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து மோடியின் தாய் ஹீரா தொலைக்காட்சியில் கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.