உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 49 பள்ளிகளுக்கு நோட்டீஸ் : விளக்கம் அளிக்கத் தவறினால், பள்ளிகளை மூட நடவடிக்கை-முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை !

உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 49 பள்ளிகளுக்கு நோட்டீஸ்.உரிய விளக்கமளிக்கா விட்டால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கோவையில் உரிய அனுமதியின்றி செயல்படும் 49 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

 

நர்சரி,பிரைமரி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்,சி.பி. எஸ்.இ பள்ளிகள் ஒவ்வொன்றும் ஆண்டுதோறும் தங்களது அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.அப்படி அங்கீகாரம் இல்லாமல் கோவை மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் பள்ளிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணக்கெடுக்கப்பட்ட நிலையில் 132 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரியவந்தது.

 

இதையடுத்து அப்பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதை தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகள் தங்கள் அங்கீகாரத்தை புதுப்பித்து கொண்டன.இந்த நிலையில்19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் உட்பட 49 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

 

இதுகுறித்து பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி துறை சார்பில் நோட்டீசு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,இந்த நோட்டீசிற்கு உரிய விளக்கம் அளிக்காத பள்ளிகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply