இராமநாதபுரம் மாவட்டத்தில் பா ஜ க- வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பாஜக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 303 தொகுதிகளை வென்று வலிமை மிக்க தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளதால், இந்தியா முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே’ என்பது போல தமிழகத்தில் பாஜக உட்பட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.

இதனால் தமிழக பாஜக கட்சியினர் பெரும்பாலோனோர் சோர்வடைந்தனர் இருந்தாலும், கட்சியினர் மத்தியில் புத்துயிர் பெறும் வகையில் ,இராமநாதபுரம் அரண்மனை முன்பு, அக்கட்சியின் மாவட்ட செயலாளா்கள் ஆத்ம கார்த்திக்,முத்துசாமி ஆகியோா் தலைமையில், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.

 

இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பொன்.G.கார்த்திக், இராமநாதபுரம் ஒன்றிய
பொதுச்செயலாளர் செந்தில்குமார், இராமநாதபுரம் நகர்தலைவர் குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் வம்சி இராமகிருஷ்ணன் ஆகியோா் உடன் இருந்தனர்.


Leave a Reply