திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 – ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், திமுக மாவட்ட செயலாளா் செல்வராஜ் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைத்து, அவரது ஆதரவாளர்களும், கூட்டணிக்கட்சியான திமுகவை சேர்ந்த நிர்வாகிகளும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில் திருப்பூர் மிஷன் வீதியில் திமுக நிர்வாகிகள் சார்பில், வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த பிரமாணட்டமான பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சின்னாபின்னமாக்கினர்.
இதனை பாா்த்து திமுகவினர் அதிா்ச்சி அடைந்தனர். மேலும் அக்கட்சி நிா்வாகிகள் மத்தியிலும் பெறும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். புகாரின் பேரில் போலீசாா், பேனர் கிழித்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.