உச்சிப்புளியில் மீனவர் அடித்து கொலை! சகோதரர்கள் இருவர் கைது!

உச்சிப்புளி பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 48. மீன்பிடி தொழிலாளி. நேற்று காலை இவர், கடையில் பொருட்களிய வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு ஆட்டோவில் புறப்பட, பஸ் ஸ்டாண்ட் சென்றார்.

 

உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து ஏறி உட்கார்ந்தார். அப்போது, கீழ நாகாச்சி வெள்ளமாசிவலசையைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் அங்கு வந்தனர். ஆட்டோவில் உட்கார்ந்திருந்த ராமச்சந்திரனுக்கும், முருகேசன் மகன்களுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன் உள்ள முன் விரோதம் தொடர்பாக, மீண்டும் தகராறு ஏற்பட்டது.

 

 

இதில் , ஆத்திரமடைந்த முருகேசன் மகன்கள் முனீஸ் , கார்த்தி இருவரும், இரும்பு கம்பியால் ராமச்சந்திரன் தலையில் பலமாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலே ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

ராமச்சந்திரன் உடலை, உச்சிப்புளி போலீசார் கைப்பற்றி, இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக முனீஸ் என்ற முனீஸ்குமார் ( 27), கார்த்தி (22) ஆகியோரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், உச்சிப்புளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a Reply