கோடையில் வறண்டு கிடக்கும் காடுகள்! உணவுக்காக வீதிக்கு வந்த யானைகள்!!

வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிக்கே வந்துவிடுகிறன; இரவில் யானைகள் ரோட்டை கடப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

 

வனப்பகுதிக்குள் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத்தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன.அவ்வாறு ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயப்பயிர்களை உண்டு ருசிக்கின்றன. அத்துடன், மனித உயிர்களையும் காவு வாங்கிவிடுகின்றன.

 

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட, உதகை செல்லும் சாலையில் “பிளாக் தண்டர் ” அருகே, அடிக்கடி ரோட்டை யானை கூட்டம் கடக்கிறது. நேற்று முன்தினம் யானைகள் சாலையின் மறுபக்கம் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தன. பயிர்களை புசித்துவிட்டு, ஹாயாக ரோட்டை கடந்து சென்று, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இதே சம்பவம், நேற்றிரவும் தொடர்ந்தது. திடீரென ரோட்டை கடந்த யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

இப்பகுதி காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதி என்பதால், இரவு 8 மணிக்கும் மேல் உதகை செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும்,யானைகளின் அருகில் செல்ல முயல்வதோ,அதனை துன்புறுத்தவோ கூடாது என கூடாது என எச்சரித்துள்ள வனத்துறையினர், மீறி துன்புறுத்துவோர் மீது வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Leave a Reply