‘மெக்கானிக்’ ஆக மாறிய ராகுல் காந்தி! ஹெலிகாப்டரை பழுதுபார்த்து அசத்தல்!!

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை, பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து சரி செய்த படத்தை ராகுல் காந்தி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் பாராட்டியுள்ளனர்.

 

இமாச்சல் பிரேதசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்ற ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில், சிறிய பழுது ஏற்பட்டுள்ளது. இதை, பாதுகாப்பு குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தியும் சரி செய்துள்ளார்.

 

மேலும், அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “சிறிய பழுது. கூட்டாக இணைந்து அனைவரும் முயற்சித்ததால் உடனே சரிசெய்யப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுலின் இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.


Leave a Reply