ஆதிரத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விழாவில் 3ஆம் நாளில் பல்லக்கில் சுவாமி வீதியுலா!

திருவாடானையில் உள்ள, ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் ஆலய வைகாசி விழாவில், மூன்றாம் நாள் வீதி உலா நடைபெற்றது; இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் தற்போது வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது.

 

 

இவ்விழாவின் மூன்றாம் நாள் வைபவத்தில், சுவாமி திருவீதி உலா வந்து பகதர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, ஆதிரத்தினேஸ்வரர் பல்லக்கு வாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு விநாயகர் முன்வர, அதை தொடர்ந்து ஆதிரெத்தினேஸ்வரர், மற்றும் பரிவார தெய்வங்கள் பல்லக்கு வானத்தில் திருவீதி உலா வந்து பகதர்களுக்கு அருள் பாலித்தனர்.

 

இவ்விழாவில், 9ம் நாள் நிகழ்வாக, வரும் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.


Leave a Reply