பாரதிய ஜனதாவில் இணைந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்? தாயார் தரும் சூப்பர் விளக்கம் இதுதான்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், பாரதிய ஜனதாவில் இணைந்ததாக வெளியான தகவலுக்கு, அவரது தாய் மேனகா விளக்கம் அளித்துள்ளார்.

 

நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், பாஜக உறுப்பினர். அவரது தாய் மேனகாவும் பாஜகவுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் பிரசாரம் செய்தார்; அத்துடன் டெல்லியில், பிரதமர் நரேந்திர் மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

இதற்கிடையே, முன்னணி தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷும், பாரதிய ஜனதாவில் இணைந்ததாக செய்திகள் பரவின. ஆனால், இதை அவரது தாய் மேனகா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமது கணவர் சுரேஷ் பா.ஜ.க.வின் உறுப்பினர். ஆனால், தாமோ, மகள் கீர்த்தி சுரேஷோ இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்றார்.

 

 

 

கணவர் சார்ந்துள்ள் அகட்சி என்ற முறையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக டெல்லியில் பிரசாரம் செய்தேன். அதன் பிறகு மோடியை சந்தித்தேன். அவ்வளவு தான். மற்றபடி எனக்கோ, மகள் கீர்த்தி சுரேசுக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை என்றார்.

 

கீர்த்தி சுரேஷுக்கு அரசியல் சாயம் பூசிவிட்டால், அவரது திரைப்பட தொழில் பாதிக்கப்படும் என்று கருதி, அவசர அவசரமாக மேனகா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply