திருவாடானை அருகே வைக்கோல் படப்புகளில் தீ , பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களக்குடி கிராமத்தில் அப்துல்ரஹீம் (50) என்பவரது வைக்கோல் படப்பில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென தீப் பற்றியதில் அருகில் தீ பரவ இருந்த நிலையில் திருவாடானை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சுப்பிரமணிபுரம் கிராமத்தில் அம்மன் கோவில் தெருவில் ராமநாதன்(45) என்பவரது வைக்கோல் படப்பிலும் சனி கிழமை காலை 10 மணியளவில் தீடீரென் தீ பற்றி மளமளவென பரவி அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவ இருந்த நிலையில், திருவாடானை தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்த தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். மேலும் இந்த வைக்கோல் படப்புகளில் எப்படி தீ பற்றியது என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.