இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி! எச்சரிக்கை செய்கிறது உளவுத்துறை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


புத்த பூர்ணிமா தினத்தன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த, தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அண்டை நாடான இலங்கையில், அண்மையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தின; இதில் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதேபோல், இந்தியாவிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

 

அதன்படி, புத்த பூர்ணிமா தினத்தன்று ஜமாத் உல் முஜாகிதீன் அமைப்பு அல்லது, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடும் என்று, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

குறிப்பாக, மேற்குவங்கம் மற்றும் அண்டை நாடான வங்கதேசத்திற்கு இத்தகைய ஆபத்து உள்ளதாக, அது மேலும் தெரிவிக்கிறது. இதையடுத்து இந்து மற்றும் புத்த கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.