முன் உதாரணமாக இருக்க வேண்டிய அலுவலகம்! மின் திருட்டில் ஈடுபடும் அவலம்!!

திருவாடானையில் தாலுகா அலுவலக வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலக சங்க கட்டிடத்திற்கு, சட்ட விரோதமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதை, மின் வாரியமும் கண்டு கொள்வதில்லை.

 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவக வளாகத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலக வளாகத்தினுள் ஏற்கனவே நீதிமன்றம் செயல்பட்டு வந்து, போது சிறிய சிமின்ட் ஓட்டு கொட்டகை அமைத்து அதில் வழக்கறிஞர் சங்கம் செயல்பட்டு வந்தது.

 

அதன் அருகில் திருவாடானை ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட கழிப்பறை செயல்பட்டுவந்த நிலையில் பல வருடங்களாக பூட்டி கிடக்கிறது. நீதிமன்றம் புதிதாக திறக்கப்பட்ட பிறகு. வழக்கறிஞர் சங்க கொட்டகையை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் திருவாடானை, தற்போது பயன்படுத்தி வருகிறது.

 

அருகில் உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான கழிப்பறை கட்டத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக மின் இணைப்பை பெற்று, இரண்டு மின்விசிறி மற்றும் இரண்டு டியூப் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

இதுபற்றி, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுகிறது. பாதுகாப்பின்றி மின் வயர்கள் செல்வதால், மின் விபத்துக்கு வாய்ப்புள்ளது.

 

முறைகேடாக பயன்படுத்தும் மின்சாரம் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

சட்டத்தை மதிக்க வேண்டிய அதிகாரிகளே இவ்வாறு நடந்துகொண்டால், யார் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது? இதற்கு திருவாடானை மின்சாரவாரிய ஊழியர்களும் உடந்தையாக இருப்பதாக, பேச்சு நிலவுகிறது.

 

இதற்கெல்லாம் தீர்வாக, திருவாடானையில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை பார்க்கும் அரசு அலுவலர்களை இடமாறுதல் செய்தால்தான் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply