ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள பாரதிநகர் 2வது வீதியில் பாண்டீஸ்வரி (36) என்பவர் சொந்த வீட்டில் தனது வசித்துவருகிறார். இவரது கணவர் குமார் கடந்த 10 வருடத்திற்கு முன்பு மாரடைப்பில் இறந்து போய்விட்டார். தற்போது இந்த வீட்டில் தனது தகப்பனாருடன் வசித்துவருகிறார். திருவாடானை பேரூந்து நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறாா்.

இன்று காலை அவரது வீட்டின் பிறன்புறம் பார்த்தவர்கள் கரும் புகை வருவதை கண்டு பாண்டீஸ்வரியை எழுப்பினர். அப்போது அங்கு வீட்டிக்குள் இருந்த துணிகள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, திருவாடாகை தீ அணைப்பு நிலையத்திற்கு மின கசிவால் தீப்பற்றதாக கூறியதன் பேரில், நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையில், வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

வீட்டின் அறையில் எரிந்த தீயை அணைத்து விட்டு பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த துணிகளை கீழே தள்ளிவிட்டு, நகை வைத்திருந்த பேக்கை தேடியபோது, அது காணமல் போணது தெரியவந்தது. பேக்கில் 50 பவுன் நகை இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் சம்பவ இடம் வந்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் ராமநாதபுரம் கைரேகை நிபுணர் துணைக் காணிப்பாளர் யூசுப் அதணை தொடர்ந்து மோப்ப நாய் டயானா வரவழைக்கப்பட்டு அது வீட்டை மட்டும் சுற்றி சென்றது. அதனை தொடர்ந்து வந்து தடயவியல் நிபுனர் கூடுதல் இயக்குநர் புனிதா ஆய்வு செய்யதார். திருவாடானை காவல் நிலையத்தார் நகை மாயமானது குறித்தும் துணிகள் தீப்பற்றியது பற்றி விசாரித்து வருகிறனர்.