லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் கடந்த மாத இறுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜரான, மார்ட்டினின் உதவியாளரான காசாளர் பழனிவேலு மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பழனிசாமியின் மனைவி மற்றும் மகன் குற்றம்சாட்டினர்.
மார்ட்டின் நிறுவனத்தில் பணியாற்றும் இருவர் மற்றும் வருமானவரித்துறை மீது காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிலர், மார்ட்டினுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பழனிச்சாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.