மேட்டுப்பாளையத்தில் சுழன்று அடித்த சூறாவளிக்காற்று! 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்!!

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன; இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை, வச்சினம் பாளையம்,ப கத்தூர், அன்னதாசம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் செய்வது பயிரிடுவது பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்றிரவு வீசிய பயங்கர சூறாவளிக்காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமடைந்தன.

 

 

இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இப்பகுதிகளில் ஏற்கனவே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் நாசம் செய்து வரும் நிலையில் இயற்கையின் சீற்றத்தால் வாழை மரங்கள் நாசமடைந்துள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து வச்சினம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சின்னராஜ் பேசுகையில் ” ஏற்கனவே காட்டு யானைகளால் தங்களது விவசாய பயிர்கள் நாசமடைகிறது. இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழக அரசு சூறாவளி காற்றால் முறிந்து நாசமான வாழை மரங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


Leave a Reply