மர்மமான முறையில் பனியன் தொழிலாளி கொலை! திருப்பூரில் இன்று காலை பரபரப்பு

பனியன் நிறுவனத் தொழிலாளி மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் – ரத்னம்மாள்; இவர்களது மகன் சிவக்குமார், 40; திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரசு; இருவருக்கும் 12 வயதில் பிரனேஷ் என்ற மகன் இருக்கிறார்.

 

கடந்த சில ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனை பிரிந்து தனது தாயார் ரத்னம்மாளுடன் செரங்காட்டில், சிவக்குமார் வசித்து வந்தார். நேற்று ரத்னம்மாள் கோவிலுக்கு சென்று இருந்தார். இன்று காலை ரத்னம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வயிற்றில் குத்தப்பட்ட நிலையில் குடல் சரிந்து, சிவக்குமார் இறந்து கிடந்தார்.

 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரத்னம்மாள் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, திகைத்து போயினர். இது பற்றிய தகவல் அறிந்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன் குமார், ரூரல் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

 

சிவக்குமார் மர்மமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டதற்கு பக்கத்து வீட்டில் தகராறு ஏதேனும் இருந்திருக்குமா? அல்லது, வேறு ஏதேனும் பிரச்சினையா என்ற கோணத்தில் ரூரல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Leave a Reply