குழந்தைக்கு ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவா? அவசியம் இந்த செய்தி உங்களுக்கானது தான்!

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

 

குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பு என்றாலே, அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத் தயாரிப்புகள் தான் என்றாகிவிட்டது. ஆனால், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்புவில் தீங்கு ஏற்படுத்தும் அஸ்பெஸ்டாஸ் இருப்பதாக தகவல் வெளியானது.

 

இதையடுத்து, ராஜஸ்தானில் நடத்திய தர பரிசோதனையில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கலந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், மாநில மருந்துகள் கண்காணிப்புக் குழுவில் இருந்து பெறப்பட்ட முடிவுகள், மாதிரிகளில் ஃபார்மால்டிஹைட் உள்ளதாக கண்டுபிடித்துள்ளது.

 

இந்த ஃபார்மால்டிஹைட் என்பது கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படக்கூடியது. புற்றுநோயை உருவாக்கக் கூடியதாகும்.

 

இந்நிலையில், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

 

எனவே, பெற்றோர்கள் தங்களது செல்லக்குழந்தையின் மென்மையான சருமத்துக்கு பாதுகாப்பான பொருட்களை கவனமாகத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். கூடுமானவரை, மருத்துவரின் ஆலோசனை பெற்று, இயற்கையான பொருள்களை பயன்படுத்துவது நல்லது.


Leave a Reply