வசூலில் பட்டையை கிளப்பும் அவெஞ்சர்ஸ்! முதல் நாளிலேயே ரூ.1403 கோடி கலெக்சன்!

உலகம் முழுவதும் நேற்று வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே ரூ.1403 கோடி வசூல் செய்துள்ளது.

 

மார்வல் சினிமா உலகத்தின் கதையை மையப்படுத்தி தற்போது வெளி வந்திருக்கிறது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற ஆங்கிலப்படம். ஏற்கனவே மார்வல்ஸ் தி அவெஞ்சர்ஸ், அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் மற்றும் அவெஞ்சர்ஸ் இனிபினிட்டி வார் என்ற மூன்று பாகங்களாக வெளி வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

 

தற்போது, நான்காம் பாகம் வெளிவந்துள்ளது. முந்தைய பாகத்தில் அழிந்து போன உலகத்தை மீட்பதற்கு, சூப்பர் ஹீரோக்கள் மேற்கொள்ளும் சாகசமே, நான்காம் பாகமாகும். எனவே, முந்தைய படங்களை பார்த்திருந்தால் தான், கதையை புரிந்து கொள்ள முடியும்.

 

காட்சி அமைப்பு, கிராபிக்ஸ், இசையில் மிரட்டியிருப்பதாக, நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. எனினும், முந்தைய பாகங்களுடன் ஒப்பிடும் போது, தற்போது வெளிவந்துள்ளது சற்று மெதுவாகவே கதை நகர்வதாக, சமூக வலைதளங்களில் சினிமா ப்ரியர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

 

எது எப்படியானாலும், உலகம் முழுவதும் நேற்று வெளியாகி, முதல் நாளிலேயே ரூ.1403 கோடி வரை வசூல் செய்துள்ளதாக, முதல்கட்ட பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் ரூ. 3 ஆயிரம் கோடியை இது எட்டி, டைட்டானிக், ஜூராசிக் பார்க், அவதார் போன்ற படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply