வளமும் நலமும் பெற்று வாழ்க! தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டில் மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

தமிழ் புத்தாண்டான விஹாரி ஆண்டு பிறந்துள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

 

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மேலும் புத்தாண்டில் தமிழ் மக்களின் ஆசைகள் நிறைவேற்றப்படும் எனவும் பதிவிட்டுள்ளார். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.


Leave a Reply