இடைத்தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் பாருங்க! திருவாடானையில் நடிகர் செந்தில் ‘புது குண்டு’

இடைத்தேர்தலுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் டி.டி.வி. தினகரனிடம் வந்துவிடும் என்று நடிகர் செந்தில், திருவாடானையில் பிரசாரம் செய்தார்.

 

அ.ம.மு.க.வின் ராமராதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் வ.து.ந.ஆனந்த்தை ஆதரித்து  நடிகர் செந்தில், திருவாடானை நான்கு சந்திப்பு பகுதியில் திறந்த வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார்.

 

அப்போது அவர்  பேசுகையில், இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக டி.டி.வி. தினகரன் வசம் தேர்தலுக்கு பிறகு வந்துவிடும். இந்த இடைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நம் பக்கம் வந்து விடுவார்கள்.

 

நீங்கள் அம்மா ஜெயலலிதாவிற்கு தான் வாக்களித்தீர்கள். இடையில் இவர்கள் எப்படி முதல்வராக வந்தார்கள்?  சசிகலா தான் இவர்களை முதல்வராக ஆக்கினார் என்று நடிகர் செந்தில் பேசினார்.

 

பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.


Leave a Reply