தாராபுரத்தில் டோக்கன் விநியோகம் செய்த த.வெ.க
தாராபுரம் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 320 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீராச்சி மங்கலம் பகுதியில் வெளியூர் நபர்கள் சிலர் த.வெ.க டோக்கன் வழங்குவதாக வெளியான செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் அந்த வெளியூர் நபர்களை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதாவது, சம்பவ இடத்திற்கு சென்ற அ.தி.மு.க-வினர் கார் ஒன்றில் த.வெ.க-வின் துண்டு பிரசூரங்கள், டோக்கன் இருந்ததை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் குறிப்பிட்ட பகுதிக்கு வந்த நிலையில் டோக்கன் கொடுத்து கொண்டிருந்தவர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் அவர் இணைந்த நிலையில் தற்போது தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க வேட்பாளராக சத்தியபாமா தான் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





