பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..!
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை ஓமலூர் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை விஜய் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பள்ளி மாணவியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





