பள்ளி மாணவர்களிடையே யோகாசனம், நடனமாடி அசத்திய ரோபோ..!
திருச்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் யோகாசனம் நடனம் ஆகியவற்றை ரோபோ எந்திரன் நிகழ்த்தி காட்டியது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இதில் ஒரு நிகழ்ச்சியாக மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் ரோபோடிக் பயிற்சி வகுப்பை நடத்தினார்கள்.
இதில் மாணவர்கள் கல்வி திறனை வளர்த்துக்கொண்டு சமுதாயத்திற்கு நல்லது செய்யும் ரோபோ இயந்திரங்களை தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.





