அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போட்டதால் அதிர்ச்சி..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செஞ்சி பகுதியில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
அரசு மருத்துவமனையின் இம்பாட்டர் பராமரிப்பின்றி இருந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தையல் போடப்பட்டது. இந்த காணொளி தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





