உலகின் மிக அதிக வயதான இங்கிலாந்தை சேர்ந்த மனிதர் மரணம்!
உலகின் மிக வயதான நபராக கருதப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த பாப்வெயிட்டன் மரணமடைந்தார். ஆல்டன் பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தனது 112 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாப்வெயிட்டன் தூக்கத்திலேயே நேற்று அவரது உயிர் பிரிந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உலகின் மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயது ஜப்பானின் ஷிரிட்டன் பிப்ரவரி மாதம் காலமானதை அடுத்து பாப்வெயிட்டன் உலகின் மிக அதிக வயதான மனிதராக இருந்து வந்தார்.






