பெரம்பலூரில் தானே செங்கல் தயாரித்து வீடு கட்டும் எஞ்சினியரிங் மாணவர்..!
பெரம்பலூர் அருகே தானே செங்கல் தயாரித்து மண்ணை மட்டுமே கலவையாக்கி மாடி வீடு ஒன்றை தற்சார்பு முறையில் கட்டி வருகிறார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர். இந்த வீடு காலநிலைக்கு ஏற்ற சூழலை தரும் என்கிறார் அந்த மாணவர். கொரோனா ஊரடங்கு பொதுமக்களுக்கு கடும் சிரமங்களை தந்த போதிலும் ஒரு சிலருக்கு புது சிந்தனைகளை தந்துள்ளது.
பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்ற கல்லூரி மாணவர் தற்சார்பு முறையில் வீடு கட்டும் முயற்சியில் இறங்கினார். ஏற்கனவே வழக்கமான முறையில் அஸ்திவாரம் போடப்பட்டு இருந்த இடத்தில் தானே செங்கல் தயாரித்து விடலாம் என களத்தில் இறங்கிய ஜகன் தங்களது வயல் மண்ணை எடுத்து அதனை பக்குவப்படுத்தி புது வகை இயந்திரத்தில் அழுத்தம் கொடுத்து செங்கல்லை தயாரிக்கிறார்.
அந்த செங்கல் சுடாமல் காயவைத்து சிமெண்ட் கலவை எதுவுமின்றி சுவர் எழுப்பி வருகிறார் ஜகன். வழக்கமாக மாடு வீட்டிற்கு சென்டரிங் போடுவது போல் அல்லாமல் கம்பிகள் இன்றி சிறிய செங்கலை வைத்து பிரத்தியேகமாக மேற்கூரை போடும் திட்டம் வைத்து இருப்பதாக தெரிவிக்கிறார்.
இவர் இந்த தற்சார்பு வீடு 800 சதுர அடியில் மண்ணை மட்டுமே பயன்படுத்தி வருவதால் வழக்கமான கட்டுமான செலவில் இருந்து பாதி பணம் மிச்சம் என்கிறார் மாணவர்.






