--- --:--:-- --

ஆடு மேய்க்கவில்லை என சிறுவன் அடித்துக் கொலை, உடல் தோண்டி எடுப்பு

3

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டியில், ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை என்ற காரணத்திற்காகச் சிறுவன் சுரேஷ் என்பவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பண்ணை உரிமையாளரான முருகன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இக்கொலையை வெளியில் சொல்லாமல் மறைப்பதற்காகச் சிறுவனின் தாய் வெண்ணிலா மற்றும் அவரது குழந்தைகளை ஆட்டுப்பண்ணையிலேயே அடைத்து வைத்துக் கட்டிப்போட்டுச் சித்ரவதை செய்து வந்ததும், அங்கிருந்து தப்பியோடி வந்த தாயின் புகாரைத் தொடர்ந்து, கோழிப்பண்ணை அருகே புதைக்கப்பட்ட சிறுவனின் உடலைத் தோண்டி எடுத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon